உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 6,92,015 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71,241 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று ருத்ர தாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடாக போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாகின.
அப்போது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம் மாநிலம் தப்பிக்குமா? என்று மக்கள் ஏக்கத்துடன் பார்த்தனர். ஆனால் அந்த அளவிற்கு உத்தர பிரதேசத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால் தற்போது இந்தியாவில் 2-ம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த முறை உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று அம்மாநிலத்தில் 15,553 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் அந்த மாநிலத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாகும்.
இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,92,015 ஆக அதிகரித்துள்ளது. 71,241 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று 67 பேர் உயிரழக்க இதுவரை 9,152 இதுவரை உயிரிழந்துள்ளனர். லக்னோவில் 4,444 பேரும், வரணாசியில் 1,740 பேரும், அலகாபாத்தில் 1,565 பேரும், கான்பூரில் 881 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 6,11,622 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.