ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினை விட்டு வெளியேறி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படும் எனவும் நவீன் திஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.