யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுகிறது.
காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தமிழீழ பொலிஸாரின் சீருடையை ஒத்தி சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
இதனால் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் பொலிஸாரின் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று மாலை ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.
இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
யாழ். மாநகர ஆணையாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!
- Master Admin
- 08 April 2021
- (656)

தொடர்புடைய செய்திகள்
- 05 January 2021
- (537)
நிலஅதிர்வு காரணமாக விக்டோரியா நீர்த்தேக்...
- 11 November 2020
- (416)
காவல் துறை உத்தியோகத்தர்கள் 80 பேருக்கு...
- 06 December 2020
- (443)
காலி மாவட்டத்தில் உள்ள 26 பாடசாலைகளுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.