ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள், தோற்றம்,ஆளுமை என பல்வேறு வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே நீண்ட நாட்களுக்கு இளமை பொலிவுடனும், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடனும் இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பாதால், இயல்பாகவே சுறுசுறுப்புடையவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உடல் செயல்பாடுகளில் எப்போதும் அதிக அக்கறை கொண்டவர்களாகவும் கட்டுக்கோப்பான உடலை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாகவும் இருப்பார்கள்.
இயல்பாகவே வசீகர முகத்தை கொண்ட இவர்கள் தங்களின் அழகை மெருகூட்டும் செயற்பாடுகளில் ஆதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களை அனுபவிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் மீது எப்போதும் அதிக அக்கறை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பாகவே உடற்பயிற்சி மற்றும் அழகுசாதன பொருட்கள் மீதான ஆர்வம் சற்று அதிகமாகவே இருக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் முறையான பழக்கவழக்கங்களை பின்பற்றி வாழ வேண்டும் என்று சிந்திப்பவர்கள்.
அவர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அழகை பராமரிக்க வேண்டும் என்பதிலும் தன்னிச்சையாக செய்ற்படுவார்கள்.
அவர்கள் ஒரு ஆரோக்கியத் இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதற்காக கடினமான உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.