முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை.
ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் கண்ணின் இமைகள் நீளமானவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு அழகான கண்களை கொண்டிருந்தாலும் இமைகள் நேர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இல்லாவிட்டால் அந்த கண்களுக்கு ஈர்ப்பும் கவர்ச்சியும் இருக்காது. பெண்களுக்கு பொம்மை போன்ற கண் இமைகள் இருந்தால் இந்த கண்களுக்கு காந்தத சக்தி அதிகமாக இருக்கும்.
அடர்த்திாக கண் இமைகளைப் பெற பலர் இப்போது சிகிச்சைகளுக்குச் செல்கிறார்கள்.இன்னும் சிலர் செயற்கையான கண் இமைகளை ஒட்டிக்கொள்கின்றார்கள். ஆனால் வீட்டில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டே கண் இமைகளை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்றலாம். எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆமணக்கு எண்ணெய்
கண் இமைகள் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு ஆமணக்கு எண்ணெய் பெரிதும் துணைப்புரியும். ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தும் போது கண்களினுள் படாதவாறு கவனமாக பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்கும் முன்னர் இதனை இமைகளில் தடவுவதனால் விரைவில் இமை முடிகள் வளர ஆரம்பிக்கும்.
லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கண் இமைகளில் தடவினால் கண் இமைகள் அடர்த்தியாகும். இந்த எண்ணெயை தடவபிய பின்னர் குறைந்தது 30 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை கண் இமைகளில் தொடங்கி, 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் கண் இமைகள் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.
வைட்டமின் ஈ
இமை முடிகள் விரைவில் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைட்டமின் ஈ பெரிதும் உதவும். இரவில் தூங்கும் முன்னர் கண் இமைகளில் மஸ்காரா பிரஷ் மூலம் வைட்டமின் ஈ யை தடவிவந்தால் பொம்மை போன்ற இமைகளை பெறலாம்.
தேங்காய் பால்
கண் இமைகள் அடர்த்தியாக்க தொன்று தொட்டு பின்பற்றப்படும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று தான் தேங்காய் பால். சுத்தமான பருத்தி துணி அல்லது பஞ்சை பயன்படுத்தி தேங்காய்ப்பாலில் நனைத்து கண் இமைகளில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் இமைகள் அடர்த்தியாகும்.