முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி தாக்கல் செய்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட் 7 பேரின் பெயர்கள் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னார் பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து சென்றமை ஊடாக பொது சொத்துக்கள் முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து அவரைக் கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் அவரை தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.
இந்தநிலையில், 6 நாட்களின் பின்னர் தெஹிவளை – எபனேசர் வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.