புதன் பகவான் கும்ப ராசியில் வக்ர கதியில் பயணிக்க இருக்கும் நிலையில், நன்மையினை பெறும் ஐந்து ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின்படி புதன் பகவான் தான் அறிவு, படிப்பு, புத்திச்சாலித்தானம் போன்றவற்றிற்கு அதிபதியாக உள்ள நிலையில், அவ்வப்போது தனது நிலையில் மாற்றத்தினை மேற்கொள்கின்றார்.

பிப்ரவரி 26ம் தேதி புதன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர தொடங்குகின்றார். இவ்வாறு பின்னோக்கு நகர்வதற்கு வக்ர கதி என்று பெயர்.

மார்ச் மாதம் 13ம் தேதி வரை நீடிக்கும் இந்த மாற்றத்தினால் குறிப்பிட்ட சில ராசியினர் பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக நன்மைகளை பெறுவார்கள். 

அந்த வகையில் புதன் வக்ரமாவதால் எந்தெந்த ராசியினர் அதீத நன்மையினைப் பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky

ரிஷபம்

ரிஷப ராசியில் புதன் 10ம் வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், தொழில் ரீதியான புதிய ஒப்பந்தமும் கையெழுத்தாகுமாம்.

சொத்து தொடர்பான பிரச்சனையில் சாதாகமான தீர்வு கிடைப்பதுடன், ரியல் எஸ்டேட் விடயத்தில் சாதாகமாகவே இருக்கும். சொத்து மற்றும் புதிய வாங்கும் யோகமும் இருக்கின்றது.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky

மிதுனம்

மிதுன ராசியில் புதன் பகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் வக்ரமாகும் நிலையில், இதன் காரணமாக நிலுவையில் இருந்து வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருமாம்.

உங்களது சாமர்த்தியமான பேச்சினால் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பினை பெறுவதுடன், பழைய முதலீடுகளில் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். பொருளாதார நிலையும் இந்த நேரத்தில் வலிமையடையும்.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky

கன்னி

புதன் கன்னி ராசியினருக்கு 6ம் வீட்டில் வக்ரமடைவதால், அலுவலகத்தில் கூடுதலாக பொருப்புகள், மேலதிகாரிகளின் நல்ல மதிப்பும் கிடைக்கும்.

கணக்கு மற்றும் ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்கின்றது. நீங்கள் வராது என்று நினைத்த பணம் மீண்டும் உங்களுக்கு வந்து சேரும். கூடுதல் வருமானம் பெறுவதற்கு வழிகளும் பிறக்கும்.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky

துலாம்

துலாம் ராசியில் புதன் 5ம் வீட்டில் வக்ரமாவதால், தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தினை பெறு முடியும். நீண்ட நாட்களாக தாமதமான வழக்குகள் முடிவிற்கு வரும்.

ஊடகத்துறையில் உள்ளவர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைப்பதுடன், வெளிநாடு செல்லவும் திட்டமிடும் நபர்களுக்கு வாய்ப்புகள் கைகூடி வருகின்றது.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky

கும்பம்

கும்ப ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் வக்ரமாவதால், புத்திசாலிசாலித்தனம், புதிய சிந்தனைகளும் மேலோங்கும். ஐடி துறையில் உள்ளவர்களுக்கு சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் மிகப்பெரிய பலன்களையும் கொடுக்கும். பொருளாதார தடைகள் நீங்கு பணப்புழக்கம் அதிகமாகுமாம்.

வக்ர நிலையில் புதன் பகவான்... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார்? | Pudhan Transit 5 Zodiac Signs Very Lucky