பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை கடித்ததாக இளைஞன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான். 

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது . 

தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளான். 

காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விரலை கடித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.