வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள் அதனால் அரசாங்கத்தினை நம்பி எமது கட்சியூடாகவும், கட்சிக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியுள்ளனர் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கக்கரி செய்கை விவசாயிகள் சந்திப்பும், உதவி வழங்கும் நிகழ்வும் இன்று (2) மாங்கேணியில் இடம்பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பிற்கு வருகை தருவதாக ஜனாதிபதிடன் பேசிய போது மக்களின் பிரச்சனை கேட்டறிந்து என்னிடம் சொல்லுங்கள் என்றார். வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வேறு கட்சிகளின் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்கள் உங்களுடைய பிரச்சினைகளை பற்றி பேசுவது கிடையாது. அவர்களுடைய வியாபாரத்தினை மாத்திரம் பேசுகின்றனர்.
இவர்கள் மக்களின் பிரச்சனைகளை பேசாது வேறு பிரச்சனைகளை பேசுவதால் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றது. நீங்கள் கஷ்டமாக இருந்தால் மாத்திரம் அவர்களுக்கு சந்தோசம். உங்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களுக்கு பிரச்சினை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்த போது எல்லோரும் சொன்னார்கள் தமிழ் மக்களின் கதை முடிந்தது என்று. ஆனால் அவர் வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. ஜனாதிபதி வந்ததன் பிற்பாடுதான் உங்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்துள்ளன. என்றார்.
வடக்கு கிழக்கு மக்கள் எமது ஜனாதிபதியை நம்புகின்றார்கள்
