வட மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு நேற்றைய நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியார்கள் 320 பேரின் மாதிரிகள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் 755 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நகர கடைத் தொகுதியில் 800க்கும் அதிகமானோரின் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்காக கொழும்பு – முல்லேரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.