ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன்- சனி பகவான் இரண்டும் முக்கிய கிரகங்களாக பார்க்கப்படுகின்றது.

நவகிரகங்களில் இவை இரண்டும் முக்கிய கிரகங்கள் என்பதால் இதில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி 5 ஆம் தேதி சனியும், சூரியனும் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் இருக்கும்.

இது ஜோதிடத்தில் “லாப திருஷ்டி யோகம்” என அழைக்கப்படுகிறது. இந்த மாற்றத்தினால் குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு மங்களம் உண்டாகும்.

அந்த வகையில், நாளை மறுதினம் அளவில்லாத அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் பெறும் ராசிகள் என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Daily Rasipalan: சனிபகவான்- சூரியன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் 3 ராசிகள் | Sun Saturn Transit Lucky Zodiac Signs

மேஷ ராசி  
  • பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
  • எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
  • உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
  • தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
  • புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம் ராசி 
  • உடல்நலனில் கவனம் தேவை.
  • வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
  • நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
  • பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
 கடகம் ராசி
  • வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.

சிம்மம் ராசி

  • நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
  • வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
  • தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
 கன்னி ராசி
  • செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.
  • நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
  • வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
துலாம் ராசி
  • சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
  • கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
  • வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
விருச்சிகம் ராசி
  • புதிய முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான நாள்.
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
  • ஆறுமுகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
  • வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
 தனுசு ராசி
  • அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
  • உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
  • வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
 மகரம் ராசி
  • பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
  • வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். 
  • இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
கும்பம் ராசி 
  • மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
  • தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
  • வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
 மீனம் ராசி
  • எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
  • சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
  • வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.