பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் வரும் சந்தர்ப்பத்தில் வயிறு மற்றும் உடல் வலி ஏற்படுவதுண்டு.
இந்த நேரத்தில் பெண்கள் அவர்களின் வேலையை செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இதனால் உடல் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக எல்லா பெண்களுக்கும் 1 தொடக்கம் ஏழு நாள் வரைக்கும் மாதவிடாய் போகும் என தெரியும். இதுவே ஆரோக்கியமான மாதவிடாயின் கால அளவாகும்.
எனவே மாதவிடாய் உண்டாகும் முதல் நாளில் தலைக்கு குளிப்பது நல்லது. மற்றும் தலைக்கு குளிக்கும் போது நல்லலெண்ணெய் சேர்த்து தலையில் இருந்து கால் வரைக்கும் தேய்த்து குளித்தல் வேண்டும்.
இப்படி குளித்தால் உடல் சூட்டை தணித்து உடலின் ஹார்மோன்கள் குளிர்ச்சியடைந்து வலி வராமல் தடுக்கும். இதனால் உடல் நிலை சீராக இருக்கும்.
மலச்சிக்கல், வாயுப்பிரச்சனை இருப்பவர்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் மோசமாக இருக்கும் இந்த நேரத்தில் காய்கறிகள், பழங்களை அதிகளவில் உண்ண வேண்டும்.
அதுவும் உங்களுக்கு பசி எடுத்தால் மட்டுமே நீங்கள் உணவு உண்ண வேண்டும். இதன்போது உங்கள் வலி காணமல் போய் விடும்.
மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இளநீர், பழங்கள், பழச்சாறுகள், காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் வலி இல்லாத மாதவிடாய் பெறலாம்.
ரத்த போக்கு என்பது மிகவும் அவசியம் மாதவிடாயின் போது இட்லி, தோசை அதிகமாக சாப்பிட்டால் ரத்த போக்கு கட்டுப்படும். எனவே இந்த உணவுகளை குறைத்து உண்ண வேண்டும்.