பொதுவாக எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும் ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.

நம் வசிக்கும் வீட்டில் குருவி, பறவைகள் என பல உயிரினங்கள் அவ்வப்போது வரக்கூடும். எனவே எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும், எந்தெந்த உயிரினங்கள் வந்தால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிட்டுக்குருவி 

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Lucky Birds Enter Home In Tamil

வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை ஒருபோதும்  துரத்தக்கூடாது. பொதுவாக இலகுவில் சிட்டுக்குருவி வீட்டிற்குள் வராது அப்படி சிட்டுக்குருவி வீட்டிற்குள் வந்தால் அது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நல்ல சகுனமாக கருதப்படுகிறது. சிட்டுக்குருவி துழையும் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

ஆந்தை 

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Lucky Birds Enter Home In Tamil

ஆந்தையின் தோற்றம் காரணமாக பலருக்கும் அதனை பிடிப்பதில்லை ஆனால் ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாகும். வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார். எனவே ஆந்தை உங்கள் வீட்டிற்குள் நுழைவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரக்கூடிய விடயமாகும். 

பல்லி 

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Lucky Birds Enter Home In Tamil

பொதுவாக பெரும்பாலனவர்களின் வீடுகளில் பல்லி இருக்கும். ஆனால் அதனை பலரும் துரத்திவிட நினைப்பார்கள். பல்லி அதிர்ஷ்டம் தரும் உயிரினமாகும். வீட்டில் ஒரு பல்லி கூட இல்லை எனில் அங்கு பணவரவு குறைந்துக் கொண்டே இருக்கும்.

வீண் செலவுகளும் விரயங்களும் அதிகரிக்கும். ஆனால் அதே உங்கள் வீட்டின் பீரோவுக்கு பின்னால் பல்லி இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படி இருந்தால் விரைவில் செல்வ வளம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.

புறா

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Lucky Birds Enter Home In Tamil

புறா வீட்டிற்கு வருவது நல்ல சகுனத்தையே குறிக்கும். புறா வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே புறாக்களுக்க்கு தானியம் போடுவது தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும்.

புறா மகா லட்சுமியின்  உருவமாக கருதப்படுகின்றது. புறா வீட்டிற்குள் வந்தாலோ அல்லது கூடு கட்டினாலோ வீட்லில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. 

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Lucky Birds Enter Home In Tamilஇதே போல் பொன்வண்டு, குளவி, கிளி போன்றவை வீட்டிற்குள் வந்தால் அது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது.

வீடுகளில் பாம்பு, பூரான், தேள், ஆமை, விஷ பூச்சிகள் வருவது அல்லது காக்கை வருவது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இவை வீட்டிற்கு வந்தால் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. வீட்டில் பிரச்சனைகள், துன்பங்கள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.