எகிப்தின் Sohag நகரில்  இரண்டு ரயில்கள் மோதுண்டதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 60 இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக, எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சிறு காயங்களுக்குள்ளான 50 பேர் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பயணித்த ரயிலில் இருந்த சிலர் , ரயிலின் அவசர கட்டுப்பாட்டு ஆளியை அழுத்தியதையடுத்து, பின்னால் வருகை தந்த ரயிலுடன் மோதுண்டுள்ளதாக, எகிப்தின் ரயில்வே கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.