ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதிநிலை, திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 40 வயதை கடக்கு போது கோடீஸ்வரராக மாறும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி 40 வயதை கடந்த பின்னர் ராஜ வாழ்க்கை வாழும் பேரதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பிலேயே திட்டம் தீட்டுவதில் வல்லவர்களாகவும். எதிர்காலம் குறித்து சரியாக கணிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் இவர்களின் இந்த தனித்துவமாக குணங்கள் மற்றும் சரியான முறையில் நிதியை கையாளும் திறன் இவர்களை கோடீஸ்வர்களாக மாற்றும்.
இவர்கள் பிறப்பில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களின் கடின உழைப்பால் பிற்காலத்தில் நிச்சயம் சொகுசு வாழ்க்கையை அனுபவித்தே தீருவார்கள்.
மிருகசீரிஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே உலகத்து அறிவுக்கும் புத்திக்கூர்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே பணத்தை இரட்டிப்பாக்கும் கலை இவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இவர்களின் அசாத்திய நிதி முகாமைத்துவ ஆற்றலால் எதிர்காலத்தில் கோடிகளுக்கு அதிபதியாக மாறுவார்கள்.
இவர்களிடம் சூழ்நிலைகளை புரிந்து கடந்து செல்லும் குணம், கடினமான சூழ்நிலைகளிலும் மிகுந்த நிதானம் என்பன இருப்பதால், இவர்களின் திட்டங்கள் அனைத்தும் சரியானதாகவே இருக்கும். இவர்கள் 40 வயதுக்கு மேல் நிச்சயம் பணக்காரர்களாக மாறுவார்கள்.
புனர்பூசம்

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே நேர்மைக்கும் உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணமே இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இவர்களுக்கு இயல்பாகவே பணத்தையும், செல்வ செழிப்பையும் ஈர்க்கும் ஆற்றல் இருக்கும்.
குருபகவானின் ஆசீர்வாதம் இருப்பதால் இவர்கள் வாழ்வில் மிகவும் குறைந்த முயற்சியிலேயே பெரியளவான சொத்துக்களுக்கு அதிபதியாக மாறுவர்கள்.
