கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் தற்போது பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.