குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார். 

இந்நிலையில் குரு பகவான் வருகிற மார்ச் 11 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். குரு பகவான் இப்படி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். 

வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் ; இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் காத்திருக்கு... | Guru Bhagavan To Grant Reliefமேஷம்: நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் கணிசமான வெற்றியைப் பெறுவார்கள்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். செல்வம் இருமடங்கு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.