பொதுவாகவே மனிதர்கள் ஏனைய உயிரினங்களிடமிருந்து வேறுப்படுவதற்கு காரணம் பகுத்தறிவு தான். சிந்தித்து செயல்படும் அறிவே பகுத்தறிவு ஆகும்.
அதாவது இடம், பொருள், ஏவல் பார்த்து செயலாற்றும் தன்மையை இது குறிக்கின்றது. குறிப்பாக எதை எப்போது பேச வேண்டும் என மனிதர்களால் மட்டுமே சிந்தித்து பேசவும் இயங்கவும் முடிகின்றது.
நம் எண்ணங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் நம்மிடமிருந்த வெளிப்படும் வார்த்தைகள் நல்லவையாக தான் இருக்கும்.
சிந்தனை மற்றும் வார்த்தை சிறந்ததாக இருக்கும் மனிதனின் செயல் நிச்சயம் நல்லதாக தான் இருக்கும். அந்த வகையில் மனிதனின் எண்ணங்களை நெறிப்படுத்தும் சாணக்கிய நீதியினை பின்பற்றி வாழ்வோரின் எதிர்காலம் வெற்றிகரமானதாக அமையும்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் எதிர்காலம் சிறப்பான இருக்கவும் வாழ்க்கையில் முன்னேறவும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மௌனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றார். அவை எப்படிப்பட்ட சூழ்நிலைகள் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் மற்றவர்கள் உங்கள் முன்னால் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சமயங்களில் அதில் நீங்கள் சம்பந்தப்படவில்லை என்றால், அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையீடு செய்வது உங்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் இலக்கை பாதிக்கும்.
மற்றவர்களால் நீங்கள் பராட்டப்படும் சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க வேண்டும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த நேரத்தில் பேசுவது உங்கள் மதிப்பு மற்றும் மரியாதையை குறைத்துவிடும் என எச்சரிக்கின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி உங்கள் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் உங்களுக்கு முன்னால் யாரையாவது விமர்சிக்கும் போதும் அல்லது குறைகூறும் போதும் நீங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இன்று மற்றவர்களை விமர்சிப்பவர்கள் நாளை உங்களையும் அதே போன்று விமர்சிக்கலாம்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒரு விடயம் குறித்து உங்களுக்கு முழுமையாக தெரியாத சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது சிறந்தது. சரியாக தெரியாத விடயங்களை பற்றி பேசினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியேற்படும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
எதிரில் இருப்பவர்பகள் உங்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. உணர்வுகள் புரியாதவர்களுக்கு நிச்சயம் வார்த்தைகளும் புரியப்போவது கிடையாது. மகிழ்ச்சியானதும் வெற்றிகரமானதுமான வாழ்க்கைக்கு இந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.