வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து கைக்குண்டு ஒன்றினை ஓமந்தை பொலிஸார் இன்றையதினம் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று (20) மாலை வவுனியா கொந்தக்காரங்குளம் பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட போது குறித்த காணியில் கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
எனினும் மண்ணில் புதையுண்டு வெடிபொருட்கள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர். நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.