தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, விஷ்ணு மஞ்சுவுடன் மொசகல்லு போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.
சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிசெய்த காஜல் அகர்வால், நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போவதாக தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவுடன் ஏற்கனவே தாதா படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், நாகார்ஜுனாவுடன் நடிப்பது இதுவே முதன்முறை.