மட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று ( 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்து வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை கல்முனைக்குடி 9 ம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முகமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஊறணியில்; இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பயணித்த பக்கோ இயந்திரும் ஊறணி சந்தியை குறுக்கறுக்கும் போது மோட்டர் சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 63 வயதுடைய முகமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் பலி எடுத்த பக்கோ இயந்திரம் - சோகம்
- Master Admin
- 17 February 2021
- (1291)

தொடர்புடைய செய்திகள்
- 03 January 2021
- (1373)
அரிசி, மா, சீனி, ரின் மீன் உள்ளிட்ட 10 வ...
- 08 November 2023
- (728)
வடக்கு - மேற்கு திசையில் தலை வைத்து படுக...
- 21 April 2025
- (96)
இந்த ராசியினர் பிறப்பிலேயே ராஜதந்திரிகளா...
யாழ் ஓசை செய்திகள்
கனடா ஆசை நிராசையானதால் உயிரை மாய்த்த யாழ் இளைஞன்
- 23 April 2025
இலங்கையில் ஏறுமுகத்தில் டொலர் பெறுமதி!
- 23 April 2025
யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்
- 23 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.