அவுஸ்ரேலியாவின் மிக உயர்ந்த அரசியல் அலுவலகங்கள் சிலவற்றில் பாலியல் துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் தவறான நடத்தை பற்றிய சமீபத்திய குற்றச்சாட்டுகளால், ஆயிரக்கணக்கான மக்கள் நீதிக் கோரி திரண்டுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) மெல்பேர்னில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2008ஆம் ஆண்டு முதல் அவுஸ்ரேலியாவில் கொல்லப்பட்ட பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மீட்டர் நீளமுள்ள வெள்ளை பதாதையை ஏந்தி ஊர்வலமாக நகர்ந்தனர்.
இதன்போது பெண்கள் ‘வலிமையும் துக்கமும்’ என்ற சமிக்ஞை வெளிப்படுத்து கருப்பு நிற ஆடையை அணிந்துக்கொண்டு ‘நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்று கோஷமிட்டனர்.
அதே நேரத்தில் கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ளவர்கள் மாற்றத்தைக் கோரி இரண்டு மனுக்களை வழங்கத் தயாராக இருந்தனர்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊழல்களில் அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு அடங்கும். எனினும் அவர் ‘1988 குற்றச்சாட்டை’ கடுமையாக மறுத்தார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கட்டுரை தொடர்பாக அவுஸ்ரேலிய பிராட்காஸ்டிங் கார்ப் நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்ரேலியாவின் மத்திய நீதிமன்றத்தில் போர்ட்டர் அவதூறு வழக்குகளை பதிவு செய்தார்.
ஸ்கொட் மோரிஸனின் லிபரல் கட்சியின் முன்னாள் மூத்த அரசியல் ஆலோசகரும் பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எனினும் அவர்களின் பெயர் வெளியிடப்படவில்லை அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியா பாலின சமத்துவத்திற்கு பெரும் முன்னேற்றம் கண்டதாக மோரிசன் கூறினார். மேலும் அவர் எதிர்ப்பாளர்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதேவேளை, முன்னாள் அரசியல் ஆலோசகரான பிரிட்டானி ஹிக்கின்ஸ், மூத்த அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்திற்குள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உரையாற்றிய போது தெரிவித்தார். இது பொதுமக்களின் கோபத்தை தூண்டியது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் பதில் போதுமானதாக இல்லை என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.