நடளாவிய ரீதியல் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
அந்த வகையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வுட் ஆரம்பபிரிவு இன்றைய தினம் திறக்கப்படாமையினால் ஆரம்ப பிரிவிற்கு வந்த சில மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
நோர்வுட் பிரதேச சபைக்கு கீழ் இயங்கும் நோர்வுட் பிரதேச பொது நூலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் அவருடை பிள்ளை ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நோர்வுட் ஆரம்ப பிரிவு பாடசாலை மூடப்பட்டுள்ளது.
ஆரம்ப பிரிவில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக பாடசாலை மூடப்பட்டதோடு குறித்த வகுப்பில் கல்வி பயிலும் 40 மாணவர்களுக்கு இன்றைய தினம் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளபடவிருப்பதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
இதேவேளை நோர்வுட் பொது நுாலகமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மாணவி ஒருவருக்கு கொரோனா - பாடசாலைக்கு பூட்டு
- Master Admin
- 15 March 2021
- (822)

தொடர்புடைய செய்திகள்
- 19 April 2025
- (71)
சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர...
- 07 May 2023
- (235)
அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வ...
- 06 January 2021
- (386)
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
- 19 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.