பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சரியாக மூன்று மாதங்களுக்கு மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த காலப்பகுதியில் கவலை, சுகவீனம், சோர்வு போன்ற நிலைகள் அதிகமாக இருக்கும்.
ஆகையால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மன அழுத்தம் இல்லாமலும் ஆரோக்கியமாகும் இருக்க வேண்டும்.
அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சரியாக 3 மாதங்களுக்கு சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. 3 மாதங்கள் வரை பர்கர், பீட்சா, சாட் மற்றும் தந்தூரி சிக்கன் ஆகிய உணவுகளை தவிர்த்து கொள்வதற்கு அவசியம். ஏனெனின் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான ஆரோக்கியம் தாயிற்கு தேவைப்படுகின்றது.
2. கடல் உணவுகளில் ஒன்றான மீன்களில் அதிக அளவு மெத்தில் உள்ளது. இது கருவில் உள்ள மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம். ஆகவே கடலுணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
3. வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த மாட்டிறைச்சி போன்ற உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வதை தவிர்க்கலாம். ஏனெனின் இந்த காலங்களில் பல காரணங்களினால் கரு கலைய வாய்ப்பு இருக்கின்றது.
4. காஃபி , டீ போன்ற பானங்களில் அதிகமான காஃபின் இருக்கின்றது. இது வயிற்றிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பை அதிகரிக்கலாம். ஆகவே காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
5. கர்ப்பமாக இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு தாயின் மூலம் பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பொழுது சாலையோரமாக இருக்கும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.