கண்களில் கண்ணீர் ததும்ப வீடியோ வெளியிட்டு உள்ளார் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்.

Semparuthi Serial Janani With Tears : தமிழ் சின்னத்திரையில பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜனனி அசோக் குமார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் வெள்ளித் திரையில் ஏமாளி மற்றும் நண்பேன்டா ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ப்யூடி டிப்ஸ் சம்பந்தமாக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்போது சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் உயிரிழந்த தந்தை மகன் குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.