எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பிரித்தானியாவில் இருந்து அயர்லாந்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளுடனான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் கொரோனா வைரஸ் குறித்த ஐரிஷ் அமைச்சரவைக் குழுவுக்கு வழங்கப்பட்ட ஒரு குறிப்பில், அயர்லாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் பிரித்தானியாவை இணைப்பது மிகவும் சாத்தியமில்லாத ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸை அடக்கிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஜூலை 9 முதல் 14 நாள் தனிமைப்படுத்த அயர்லாந்து திட்டமிட்டுள்ளது என்று ஐரிஷ் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.

இருப்பினும் அயர்லாந்திற்குள் வரக்கூடிய நாடுகளின் இறுதி பட்டியல் ஜூலை 9 ஆம் திகதிவரை வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.