சுஷாந்த் சிங்கின் கடைசி படம் டிஜிட்டல் வழியாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Sushant singh Last Movie Release : பாலிவுட் சினிமாவின் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சுஷாந்த் சிங்.
இரு வாரங்களுக்கு முன்னர் இவர் மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
வாரிசு நடிகர்கள் சுஷாந்த் சிங்கின் வாய்ப்புகளை தட்டிப் பறித்து அவரை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளனர். இந்த நிலையில் இவரின் கடைசி படமாக கருதப்படும் தில் பெச்சாரா வரும் ஜூலை 28 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது.
இந்த படத்தை முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இவர் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து உருக்கமாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆனால் நான் இயக்கிய முதல் படத்தின் ஹீரோ மட்டுமல்ல நல்ல நண்பன் கூட. படப்பிடிப்பில் எப்போதும் சிரிப்புடனே இருப்பார். அவரும் நானும் நிறைய திட்டங்களை தீட்டி இருந்தோம்
திறமையான நடிகர், அவர் இல்லாமல் இந்த படத்தை ரிலீஸ் செய்வேன் என நான் ஒரு போதும் நினைக்கவில்லை. நிச்சயம் சுஷாந்த் புன்னகையுடன் வாழ்த்துவார்.
மேலும் தயாரிப்பாளர் இந்த படத்தை அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் ரிலீஸ் செய்வது மகிழ்ச்சியான ஒன்று எனக் கூறியுள்ளார். ஆம் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஹாட்ஸ்டாரில் சந்தா காட்டாதவர் கூட பார்க்கலாம் என்ற வகையில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.