நாட்டில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்று நள்ளிரவு வரையான நிலைவரப்படி வைரஸ் தொற்றினால் நான்காயிரத்து 459 பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இந்நிலையல் தற்போது மொத்த பாதிப்பு நான்காயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 278 பேர் குணமடைந்துள்ள நிலையில், இன்னும் ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 14 வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.