இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது - மாளவிகா மோகனன் உருக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் 50வது நாள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும் எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்