இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று (18.2.2021), அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர், தனது வீட்டுக்கருகே சுடப்பட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக Gurvinder Pal, Sukhwinder Singh மற்றும் Saurabh Verma என்னும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த கைது சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த பொலிசார், கொலைக்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

Photo Credit: Special arrangement

 

இரண்டு குழுக்களுக்கு இடையிலான பிரச்சினையின்போது Gurlal Brar என்பவர் கொல்லப்பட்டுள்ளார். அதன் பின்னணியில் தற்போது கொல்லப்பட்ட Gurlal Singh இருந்ததாக கருதப்பட்டதால், அவரைக் கொல்ல Gurlal Brarஇன் சகோதரர் Goldie Brar திட்டமிட்டுள்ளார்.

கனடாவில் இருக்கும் அவரது திட்டத்தின்பேரில், அவரது உறவினரான Gurvinder, இரண்டு கூட்டாளிகளுடன் Gurlal Singhஐ கொல்ல சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், கட்சி ஒன்றின் இளைஞர் அணி தலைவரான Gurlal Singh, தான் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

 

timesofindia

 

அதை பயன்படுத்திக்கொண்டு அவரைக் கொலை செய்துவிடலாம் என முடிவு செய்து சதிகாரர்கள் அவரை பின்தொடர்ந்துள்ளார்கள்.

ஆனால், விவசாயிகள் பேரணியில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போயிருக்கிறது.

ஆகவே, Gurlal Singhஐ பல நாட்களாக பின்தொடர்ந்த Gurvinderம் அவரது கூட்டாளிகளும், கடந்த வியாழனன்று அவரது வீட்டின் அருகிலேயே சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகிறார்கள், வழக்கு விசாரணை தொடர்கிறது.