இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் வந்துவிட்டதால் அதன் காரணமாக படப்பிடிப்புகளை தொடர முடியவில்லை. மேலும் லைக்கா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சீக்கிய தவிப்பதால், அந்நிறுவனம் தயாரித்து வந்த இந்தியன் 2 . பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் அந்நிறுவனத்திற்கு நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்நிறுவனத்தின் மொபைல் கம்பெனி வருமானமும் பெரும் இழப்பை சந்தித்து இருப்பதால் இந்த இரு படங்களையும் அந்நிறுவனம் சன்டிவி நிர்வாகத்திற்கு கை மாற்றி விட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. இதற்கிடையில் கோரோனா ஊரடங்கு முடிந்ததும், தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை ஜூலை மாதமே படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருப்பதாக ராஜ் கமல் பிலிம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடிக்க இருக்கிறார் கமல். இதில் நாசரின் மகனாக நடிக்க விஜய்சேதுபதியை தேர்வு செய்திருக்கிறார்கள். அதாவது கமலுக்கு விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பார் எனத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, அந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகிகளையும் கமல் தேர்வு செய்துவிட்டார்.

கௌதமி தற்போது கமலை விட்டு பிரிந்து சென்று பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டதால், கௌதமியின் கதாபாத்திரத்தில் நடிக்க பூஜா குமாரை கமல் தேர்வு செய்துள்ளார். கௌதமிக்குப் பதிலாக பூஜா குமார் இடம்பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை. காரணம் கௌதமியின் இடத்தில் கமலின் வாழ்க்கைத் தோழியாக தற்போது இருந்து வருபவர் பூஜா குமார்தான். கமலின் மனைவியாக ரேவதி நடிக்கிறார். இவர்களின் செல்ல மகளாக ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் தகவல்கள் கிடைக்கின்றன.