சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். அதன் பின் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தின் நாயகியானார். ’மாஸ்டர்’ படம் ரிலீசாகும் முன்னரே மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தாலும் அவர் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் பாலிவுட்டில் ஆக்சன் திரைப்படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் ஸ்ரீதேவியும் ’மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் சித்தாந்த் சதுர்வேதி இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்காக மாளவிகா மோகனன் சுமார் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் ரூபாய் 5 கோடி என்றும் கூறப்படுகிறது

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவே இப்பொழுதுதான் 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அவர் தான் கோலிவுட் திரையுலகில் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ’மாஸ்டர்’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்த திரைப்படத்திலேயே நயன்தாராவின் சம்பளத்தை முந்திவிட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி, கோலிவுட் திரையுலகில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மாளவிகா மோகனனின் பாலிவுட் திரைப்படத்திற்கு இப்பொழுதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது என்பதும், இந்த படம் குறித்து வட இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது