பொதுவாகவே திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என எந்தவொரு சுப நிகழ்ச்சிகளின் போதும் பணத்தை பரிசாக கொடுகும் நடைமுறையே மொய் என குறிப்பிடப்படுகின்றது.

இப்படி மெய் செய்யும் பழக்கம் நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது.இந்த நடைமுறை பெரும்பாலும் தழிழர்கள் மத்தியில் பரவலாக பின்பற்றப்படுகின்றது.

மொய் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்னு தெரியுமா? | Why Do We Add One Rupee Coin In The Gift Cover

அந்தவகையில், மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.

இவ்வாறு ஒரு ரூபாய் பணத்தை சேர்த்து கொடுப்பது ஏன் என எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? அதன் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக மொய் வைக்கும் போது நூறு, ஐந்நூறு, ஆயிரம் என்று மொய் கொடுக்காமல் அதனுடன் ஒரு ரூபாய் வைத்து மொய் தான் மொய் கொடுக்க வேண்டும் என்பது பெரும்பாலானர்வளுக்கு தெரிந்திருக்கும். ஆனால், அதற்கான காரணம் தெரியாமலேயே இன்றுவரை அதனை பின்பற்றி வருபவர்களும் இருக்கின்றார்கள்.

மொய் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்னு தெரியுமா? | Why Do We Add One Rupee Coin In The Gift Cover

முன்னைய காலத்தில் பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகங்களில் மட்டுமே உருவாக்கப்பட்டது. ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை கொண்டதாக காணப்பட்டது. அவை முன்னோர்களால் முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால்தான், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயம் என முன்னோர்கள் அதுபோலவே, மற்றவர்களும் தர்மம் வழுவாமல் இந்த பணத்தை செலவிடுட வேண்டும் என்பதை நினைவுப்படுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கம் கருதி மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக கொடுக்க வேண்டும் எனற பழக்கத்தை பின்பற்றினார்கள்.

மொய் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்னு தெரியுமா? | Why Do We Add One Rupee Coin In The Gift Cover

அதனால் மொய் கொடுப்பவர்களுக்கும் தாங்கள் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு ஏற்படும்.

ஆனால் பிற்காலத்தில் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்ததன் பின்னர் அந்த வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, மொய்ப்பணமாக எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார்கள். இது காலப்போக்கில் ஒரு கலாசாரமாகவே மாற்றம் பெற்றது.

வேறு பல காரணங்களும்  இதற்கு கூறப்படுகின்றது. 100, 500 , 1000 என்று ரூபாய் நோட்டுக்களை மொய்யாக கொடுக்கும் போது அந்த உறவுகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட தொகையை கொடுப்பதாக நினைத்தார்கள்.

மொய் வைக்கும்போது 1 ரூபாய் சேர்த்து வைப்பது ஏன்னு தெரியுமா? | Why Do We Add One Rupee Coin In The Gift Cover

இந்த எண்ணத்தை மாற்றுவதற்காகவும் இந்த உறவு தொட வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு ஒரு ரூபாய் சேர்த்து கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

மொய் பணத்துடன் ஒரு ரூபாயைச் சேர்ப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் இந்த நடைமுறை பின்பற்றப்பட முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. 

திருமணத்தில் பணத்தை  மொய்யாக கொடுக்கும்போது,​​மக்கள் பெரும்பாலும் 1 என முடியும் ஒற்றைப்படைத் தொகைகளைத் தேர்வு செய்கிறார்கள், இதனால் அந்த தொகையை சமபங்காக பிரிக்க முடியாததாக இருக்கும்.

இது போல் இந்த தம்பதியினரும் வாழ்க்கை முழுவதும் இணைப்பிரியாமல் இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கமும், இவ்வாறு மொய் பணத்தில் ஒரு ரூபாய் நாணயம் சேர்க்கப்படுவதற்கு முக்கிய காரணமான அறியப்படுகின்றது.