இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28, 637 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில் 5 இலட்சத்து 36 ஆயிரத்து 231 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 2 இலட்சத்து 91 ஆயிரத்து 440 பேர் வரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷடிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, அசாம் மற்றும் பீஹார் மாநிலங்களில் நேற்று அதிக தொற்று உறுதியானதால் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு புது உச்சத்தை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மஹராஷ்டிராவில் 2 இலட்சத்து 46 ஆயிரத்து 600 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேநேரம், 10 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, தமிழகத்தில் ஒரு இலட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 1898 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.