பாகிஸ்தானில் பிரசவ செலவுக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்து நின்ற ஒரு தம்பதியின் குழந்தையை, கதறக் கதற பறித்துச் சென்ற மருத்துவர் ஒருவர் அதை மற்றொரு தம்பதிக்கு விற்றுள்ளார். பாகிஸ்தானின் Tulamba என்ற பகுதியில் பெண் ஒருவர் குழந்தை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை பிறந்ததும் வந்த மருத்துவமனை பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர் அந்த தம்பதியர்.
தங்களால் அவ்வளவு பணம் செலுத்த முடியாது என அந்த தம்பதியர் தெரிவிக்க, ஆத்திரமடைந்த மருத்துவர் ஒருவர் அவர்களிடமிருந்து குழந்தையைப் பறித்துச் சென்றுள்ளார்.
குழந்தையில்லாத மற்றொரு தம்பதிக்கு அவர் அந்த குழந்தையை விற்றுவிட, பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர் அதன் பெற்றோர்.
பொலிசார் வந்து குழந்தையை மீட்டு அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த மருத்துவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இப்போது, தயவு செய்து தங்கள் மருத்துவர் மீது புகாரளிக்கவேண்டாம் என அந்த குறிப்பிட்ட மருத்துவமனை அந்த தம்பதியரைக் கேட்டுக்கொண்டுள்ளதாம்!