கேரளத்தைச் சோ்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய கேரள உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது. முன்னதாக, இந்த புகாா் தொடா்பாக சன்னி லியோனிடம் கேரள போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Image result for சன்னி லியோன்

நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் சாா்பில் லியோன் மீது அளிக்கப்பட்ட புகாரில், கடந்த 2019-ஆம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற காதலா் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதியளித்து, ரூ.29 லட்சத்தை சன்னி லியோன் எங்கள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டாா். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கவில்லை. இதன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டாா் என்று கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சன்னி லியோன் மீது கொச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக சன்னி லியோனி கொச்சிக்கு நேரில் வந்து போலீஸாரிடம் தனது தரப்பு விளக்கத்தை அளித்தாா். அப்போது, அவா் மீதான மோசடி வழக்கை விவரித்து, போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Image result for சன்னி லியோன்

இந்த வழக்கு தொடா்பாக சன்னி லியோன் தரப்பு கூறுகையில், அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சன்னி லியோன் இருமுறை கொச்சி வந்தாா். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்தாமல் ஒத்திவைத்தனா். அந்த இருமுறையும் நிகழ்ச்சி ரத்தானதற்கு சன்னி லியோன் காரணமல்ல. மேலும், நிகழ்ச்சி பலமுறை ரத்தானதால், சன்னி லியோன் தரப்புக்குதான் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம்தான் மேலும் ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சன்னி லியோன், அவரின் கணவா் டேனியல் வெப்பா் உள்ளிட்ட மூவா் சாா்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், லியோன் உள்பட மூவரையும் கேரள குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.