சினிமாத்துறை தொழில் நுட்ப ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிலும் சின்னத்திரை சீரியல்கள் சினிமாவுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. அவை மக்களை அதிகம் கவர்வதன் ரகசியம் இதுவென்றே கூறலாம்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பவர்களுக்கும் மக்களிடத்தில் நல் ஆதரவு கிடைத்து பிரபலமாகி விடுகிறார்கள். அதிகம் வரவேற்பை பெற்ற சீரியல்களில் சின்னத்தம்பு சீரியலும் ஒன்று. இதில் நடித்தவர் ஸ்வேதா வெங்கட்.
இவர் தாமரை, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019 ஜனவரியில் ஸ்வேதா திருமணம் செய்து கொண்டார். ஓராண்டாகிவிட்ட நிலையில் ஸ்வேதாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.