நான் சும்மா சினிமா சம்மந்தமா பேசியதற்கே அந்தம்மா அந்த குதி குதிச்சிது இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்குது என தனது சினிமா நண்பர்களிடம் பிரபல நடிகையை கண்டபடி விளாசி எடுத்து விட்டாராம் அந்த வில்லன் நடிகர் என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அந்த நடிகை பல ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வந்துள்ளதாகவும் தற்போது அந்த மாஸ் ஹீரோவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வரும் நிலையில், இந்த மேட்டரில் மட்டும் அம்மணி ஏன் இவ்வளவு அமைதியாக உள்ளார் என வில்லன் நடிகர் வெளுத்து வாங்கி உள்ளாராம்.

சமீபத்தில் வில்லன் நடிகருக்கும் அந்த நடிகைக்கும் இடையே வெடித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தக்க சமயத்துக்காக காத்துக் கொண்டிருந்த அந்த நடிகருக்கு தற்போது மனசு குளிர்ந்து விட்டதாக நண்பர்களுடன் பேசியது அப்படியே கோடம்பாக்கம் டீ கடை பெஞ்சுகளில் கசிந்து தீயாய் பரவி வருகிறது.

பிரபல நடிகை குடியும் கும்மாளமுமாக இருப்பது வழக்கம் என்றும் பார்ட்டிகளில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்றும் சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து பலரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி விட்டனர். ஆனால், சமீப காலமாக தன்னை பற்றி யார் என்ன சொன்னாலும் சைலன்ட் மோடிலேயே அதை அப்படியே கடந்து சென்று விடுகிறார் அந்த நடிகை என்றும் அவரது அமைதியே அந்த விஷயங்கள் எல்லாம் உண்மையா என்கிற கேள்விகளை எழுப்புவதாகவும் பேச்சுக்கள் பெரிய விவாதங்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.

இந்நிலையில், பிரபல நடிகருடன் தொடர்பு படுத்தி நடிகையை பலரும் பேசி வரும் நிலையில், இப்போது மட்டும் அமைதி காக்கும் அந்த நடிகை நான் பேசும் போது ஏன் அவ்வளவு ராங்கு காட்டினாங்க, நான் மட்டும் என்ன இளிச்சவாயனா? என கேட்டு நடிகையை பற்றி அடுக்கடுக்கான மேட்டர்களை தனது நண்பர்களுடன் அந்த வில்லன் நடிகர் பேசியதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஹீரோக்களுடன் நெருங்கி பழகலாம். கதாநாயகர்களுடன் கிசுகிசுக்கள் வந்தால் அமைதியாக இருக்கலாம். ஆனால், சாதாரண நடிகர்கள் என்றால் மட்டும் அவர் பொங்கி விடுவாரோ என குடி போதையில் கண்ட மேனிக்கு அந்த நடிகையை வில்லன் நடிகர் திட்டியிருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.