கேகாலை பொது வைத்தியசாலையின் ஊழியர்கள் 12 பேருக்கும், சுத்தப்படுத்தல் பிரிவை சேர்ந்த 6 ஊழியர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அனைத்து செயற்பாடுகளும் வழமைப்போல் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஹினிதும, தவலம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த அலுவலகத்தின் ஏனைய ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இதுவரை தவலம வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.