பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது.
அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் கயிறு கட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
அப்படி கோயிலில் இருந்து பெறப்பட்ட கயிறை பக்தர்கள் நம்பிக்கையுடன் கட்டுவார்கள். அப்படி கட்டப்பட்ட கயிறு வருட கணக்கில் கட்டுகின்றனர். ஆனால் இந்த கயிறின் சக்தி குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரமே இருக்கும்.
அறியாமையால் சிலர் கோவிலில் கொடுக்கப்படும் கயிறை அல்லது மந்திரிக்கப்பட்ட கயிறை நிறம் மாறி அதுவே அறுந்து விழும் அளவிற்கு கட்டி இருப்பார்கள்.
நாம் கையில் கட்டியிருக்கும் கயிறுக்கு எத்தனை நாட்கள் சக்தி இருக்கும் எப்பது குறித்து அவ்வாறு அகற்ற வேண்டும் மற்றும் அதை எங்கே வீச வேண்டும் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் கோயிலில் இருந்து பெறப்படும் கயிறாக இருந்தாலும் சரி மந்திரிக்கப்பட்ட கயிறாக இருந்தாலும் சரி 21 நாட்களுக்கு மாத்திரமே இதில் சக்தி இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
எனவே கைகளில் பாதுகாப்பிற்காகவே அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ கட்டியிருக்கும் கயிறை 21 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம். அப்போது மாத்திரமே அதன் பயனை முழுமையாக பொற முடியும்.
கையில் கட்டியிருக்கும் கயிறு 21 நாட்களுக்கு முன்னரே தானாக அவிழ்ந்துவிட்டாலும் அதன் சக்தி போய்விடும் மீண்டும் அதே கயிறை கட்ட கூடாது.
ஆண்கள் கயிற்றை வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும் என்றே இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. மேலும் கையில் இருந்து கழற்றும் கயிறை ஆறு அல்லது நதி போன்றவற்றில் வீசுவதே மங்களகரமானது.