வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி. பட்டாணிசூர் கிராமத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஒழுங்கைகள் இன்று (வியாழக்கிழமை) மாலை ஆறு மணியிலிருந்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாணிசூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த கிராமம் முடக்கப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முற்றாக விடுவிக்கப்பட்டது.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த பகுதியைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதி மீண்டும் முடக்கப்பட்டுள்ளதுடன், எவரும் நடமாட முடியாதபடி இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.