ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு ட்ரோன் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்

 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. அண்மைக்காலமாக இந்த அத்துமீறல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா செக்டாரின் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று இரவு ஒரு ட்ரோன் வட்டமடித்தது. எல்லைப் பாதுகாப்பு படையினர் இதனை கவனித்தனர். உடனடியாக அந்த ட்ரோன் மீது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது.