ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் சனிபகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் | Saturn Transit 2026 Who Needs To Be Careful

சனி நாம் செய்யும் கரும வினைகளுக்கு ஏற்ப அதாவது, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் பாராது கொடுத்துவிடுவார்.

அதன் காரணமாகவே சனி பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுகின்றது.

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் | Saturn Transit 2026 Who Needs To Be Careful

 

இந்நிலையில் இதுவரையில் கும்ப ராசியில் பயணித்து வரும் சனிபகவான் மார்ச் 06 ஆம் திகதி காலை 8:26 மணிக்கு, கும்பத்திலிருந்து மீனத்திற்கு இடம்பெயர்ந்தார்.

இந்த முக்கிய பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், அதிகளவில் பாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மீனம்

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் | Saturn Transit 2026 Who Needs To Be Carefulமீன ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது  ஜென்ம சனியின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. அதனால் இவர்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். 

இந்த காலகட்டம் எந்தளவுக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை கொடுக்கின்றதோ, அதே அளவுக்கு சவால்களையும் ஏற்படுத்தப்போகின்றது. எந்த விடயத்தை ஆரம்பிக்கும் முன்னரும் மிகுந்த அவதானம் வேவை.

இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிறிய பிரச்சினைகள் கூட மோதல்களில் முடியும் வாய்ப்பு காணப்படுகின்றது. உங்கள் மன அமைதியையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க வகையில் நிதானமாக செய்ல்பட்டால் வெற்றி காணலாம். 

கும்பம்

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் | Saturn Transit 2026 Who Needs To Be Careful

சனி பகவான் தங்கள் ஜென்ம ராசியிலிருந்து வெளியேறி அவர்களின் இரண்டாவது வீட்டிற்குள் நுழைகிறார், அதனால் கும்ப ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில், நிதி நிலையில் உறுதி நிலையில் ஸ்தீர தன்மை ஏற்படும்.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல் மன நிம்மதியில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சனி பெயர்ச்சி இவர்களுக்கு கடினமாக காலகட்டத்துக்கு பின்னரே சில பலன்களை கொடுக்கப்போகின்றது.

புதிய தொழில் அல்லது ஏதாவது புதிய முயற்ச்சிகளில் ஈடுபடும் முன்னர் நன்றாக  ஆராய்ந்து திட்டமிட்டடு முடிவெடுப்பதால் நிதி இழப்புகளையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

மேஷம்

சனிப்பெயர்ச்சி 2026: இந்த ராசியினர் ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும் | Saturn Transit 2026 Who Needs To Be Carefulமேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி ஏழாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஆதிக்கம் செலுத்துவதால் தொழில் ரீதியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. மற்றவர்களுடன் உரையாடும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

மீனம் சனிபக்கு நட்பு இராசியாகக் இருப்பதும், குருவின் பார்வை மீனத்தில் படுவதாலும் வாழ்க்கையில் சில விஷயங்களில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணவிடயத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடலாம். நிதியை கையாளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அந்த காலகட்டத்தில் முன்னேற்றம் உண்டு ஆனால் அதற்கு வழக்கத்தை விடவும் கடினமாக உழைப்பு மற்றும் முயற்ச்சி தேவைப்படும். பணியில் தீவிர கவனம் செலுத்தினால் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.