தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில் வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். கடந்த மாதம் நடிகர் அஜித், சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு கால் டாக்ஸியில் வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

இந்நிலையில், நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள், ‘இதைவிட எளிமையாக ஒரு நடிகர் இருக்க முடியுமா... தல... தல தான்’ என வியந்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகர் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர்.