இந்தியாவுக்கு தேவையான போர் விமானங்களை வழங்குவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி  12 சுகோய் விமானங்களும் 21 மிக் ரக விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவை விரைவில் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

சீனாவுடன் எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலையடுத்து இந்தியா -ரஷ்யா இடையிலான விமான பேர ஒப்பந்தத்தின் படி 33 போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.