யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் குடும்ப உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு குறித்து விசாரிப்பதற்காகச் சென்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

திருநகர் பகுதியில் நேற்றிரவு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய, சம்பவத்தை விசாரிக்கச் சென்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீதே சகோதரர்கள் இருவர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் சென்றிருந்ததுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.