அத்துருகிரிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 10 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அம்பாறை, உகன சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.