கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15) நிறைவடைகிறது.

அதன்படி, நாளை முதல் குற்றம் புரிந்த தினத்தில் இருந்து 14 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகை இன்றியும் மற்றும் 28 நாட்கள் வரை மேலதிக அபராதத் தொகையுடனும் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 28 தினங்களை கடந்துள்ள அபராதச் பத்திரத்திற்கு இன்றைய தினத்திற்கு பின்னர் தபால் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.