கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவம் நடத்திய தாக்குதல்  திட்டமிடப்பட்ட ஒன்று என்பது தற்போது தெளிவாகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

எல்லை பதற்றம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி விமர்சித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “சீன இராணுவத்தின் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளது பிரச்சினையை மறுத்து வந்தது. அதற்கான விலையாக இந்திய இராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை அளித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையில் தற்போது உருவாகியிருக்கும் சூழ்நிலை குறித்து விவாதிக்க  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில்  ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளார்.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கட்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த இராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா்.

இந்தச் சம்பவத்தில் இராணுவ உயர் அதிகாரி மற்றும் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உட்பட 20 இராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். 76 இந்திய வீரர்கள் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.