படம் வருகிற 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast). இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
இப்படத்திற்கு அண்மையில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. படம் வருகிற 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
